உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்ய நிதி ஒதுக்க வேண்டும் - விஜய்வசந்த் எம்.பி.யிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்

Published On 2022-11-30 08:51 GMT   |   Update On 2022-11-30 09:44 GMT
  • இந்த பள்ளி நூற்றாண்டுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த கன்னியாகுமரி அரசு தொடக்கப் பள்ளியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
  • பள்ளியின் சுற்று சுவர் உயரத்தை எழுப்ப வேண்டும், பள்ளி மைதானத்தில் அலங்கார தரையோடு கற்கள் பதிக்க வேண்டும்

கன்னியாகுமரி :

விஜய்வசந்த் எம்.பி.யை குமரி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் தாமஸ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி 17 -வது வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ் ஆகியோர் தலைமையில் கன்னியாகுமரி அரசு தொடக்கப் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதில் அவர்கள் கூறி இருப்பதாவது;-

கன்னியாகுமரி மெயின் ரோட்டில் பழைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஆட்சி காலத்தில் மலையாள பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்த பள்ளி நூற்றாண்டுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த கன்னியாகுமரி அரசு தொடக்கப் பள்ளியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.

பள்ளியின் சுற்று சுவர் உயரத்தை எழுப்ப வேண்டும், பள்ளி மைதானத்தில் அலங்கார தரையோடு கற்கள் பதிக்க வேண்டும், பெயர் பலகை சீரமைக்க வேண்டும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கிட வேண்டும், பழைய கட்டிடத்தை பராமரிக்க வேண்டும், கழிவறை சீரமைத்தல், ஒலி பெருக்கி அமைத்தல் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டியது உள்ளது.

எனவே இந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தங்களது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News