உள்ளூர் செய்திகள்

குமரியில் ஒரே நாளில் 49 பேர் பாதிப்பு குழந்தைகள் 10 பேருக்கு கொரோனா

Published On 2023-04-05 06:59 GMT   |   Update On 2023-04-05 06:59 GMT
  • 14 பேர் ஆண்கள் 25 பேர் பெண்கள் 10 பேர் குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
  • முஞ்சிறை ஒன்றியத்தில் அதிகபட்சமாக 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில், ஏப்.5-

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்க எண்ணில் இருந்த பாதிப்பு இரட்டை இலக்க எண்ணாக அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.பெரும்பாலும் பெண்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டதில் 14 பேர் ஆண்கள் 25 பேர் பெண்கள் 10 பேர் குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பெண் குழந்தைகள் 8 பேரும் ஆண் குழந்தைகள் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முஞ்சிறை ஒன்றியத்தில் அதிகபட்சமாக 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 9 பேருக்கும், குருந்தன்கோடு ஒன்றியத்தில் 3 பேரும், மேல்புறத்தில் ஒருவரும், நாகர்கோவிலில் 6 பேரும், ராஜாக்கமங்கலம், தக்கலையில் தலா 4 பேரும், திருவட்டாரில் 5 பேரும், தோவாளையில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் 100 படுக்கையுடன் கொரோனா வார்டு ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. தக்கலை மற்றும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News