உள்ளூர் செய்திகள்

29-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் ஆய்வு செய்தபோது எடுத்த படம். அருகில் கவுன்சிலர் மீனாதேவ் உள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சி 29-வது வார்டில் நேரில் ஆய்வு

Published On 2022-10-26 08:18 GMT   |   Update On 2022-10-26 08:18 GMT
  • ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை
  • மேயர் மகேஷ் தகவல்

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி 29-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மேயர் மகேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கவுன்சிலர் மீனாதேவுடன் செட்டி தெருவில் இருந்து தனது ஆய்வு பணியை தொடங்கினார். கணேசபுரம் ரோடு கேபி ரோடு உள்பட 29-வது வார்டுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மோட்டார் சைக்கிளில் சென்று நடந்து சென்றும் ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு இடங்களில் கழிவுநீர் ஓடைகள் சேதம் அடைந்து காணப்பட்டது

அதை உடனடியாக சீரமைக்க அவர் உத்தரவிட்டார். மேலும் அலங்கார தரைக் கற்கள் சேதமடைந்து இருந்ததை சீரமைக்கவும் நடவடிக்கையை மேற்கொண்டார்.

இதுகுறித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஒவ்வொரு வார்டாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். முதற்கட்டமாக சுகாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. 29-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. ஏற்கனவே போடப்பட்ட அலங்கார கற்கள் சேதமடைந்துள்ளது.

ஆக்கிரமிப்புகள் பல இடங்களில் உள்ளது. வீடுகள் கடைகள் பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டி உள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் . மேலும் 29-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து கவுன்சிலரிடம் கேட்டு அறிந்து உள்ளேன்.

சில இடங்களில் குடிநீர் தொட்டி சேதம் அடைந்து காணப்படுகிறது. அந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாத குடிநீர் தொட்டிகளை அகற்றவும் உத்தரவிட்டுள்ளேன்.

நாகர்கோவில் மாநகராட்சி முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதற்கு கவுன்சிலர்கள் அனைவரும் மட்டுமின்றி பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார் .ஆய்வின் போது தி.மு.க. மாநகரச் செயலாளர் ஆனந்த் தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News