ஆரல்வாய்மொழியில் உறவினரை கொலை செய்த வழக்கில் பெயிண்டருக்கு 8 ஆண்டு ஜெயில் - மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு
- மோகன் போவாஸ் அவரது தாயார் மாணிக்க முத்துவிடம் தகராறில் ஈடுபட்டார்
- 8 ஆண்டுஜெயில் தண்டனையும் ரூ. 2000 அபராதமும் விதித்து தீர்ப்பு
நாகர்கோவில் :
ஆரல்வாய்மொழி இந்திரா கூட்டுக் குடியிருப்பை சேர்ந்தவர் பெஞ்சமின் சுரேஷ்பாபு (வயது 37). ஒழுகினசேரி மேல தத்தையார் குளத்தைச் சேர்ந்தவர் மோகன் போவாஸ் (55). உறவினரான இருவரும் பெயிண்டர் வேலை செய்து வந்தனர்.
கடந்த 2015 -ம் ஆண்டு ஜனவரி மாதம் பெஞ்சமின் சுரேஷ் பாபு மேலதத்தையார் குளத்தில் உள்ள மோகன்போவாஸ் வீட்டிற்கு வந்தார். அப்போது மோகன் போவாஸ் அவரது தாயார் மாணிக்க முத்துவிடம் தகராறில் ஈடுபட்டார்.
அதை பெஞ்சமின் சுரேஷ் பாபு தட்டி கேட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தினார். படுகாயம் அடைந்த பெஞ்சமின் சுரேஷ் பாபுவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்து கோட்டார் போலீசார் மோகன் போவாஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கைது செய்யப்பட்ட மோகன்போவாஸ்ஜா மீனில் வந்த நிலையில் வழக்கிற்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மோகன் போவாஸ் இன்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்.வழக்கை விசாரித்து நீதிபதி ஜோசப் ஜாய் இன்று தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட மோகன் போவாசுக்கு 8 ஆண்டுஜெயில் தண்டனையும் ரூ. 2000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
ரூ 2000 அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து மோகன் போவாஸ் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் அரசு குற்றத்துறை வழக்கறிஞர் மதியழகன் ஆஜர் ஆனார்.