உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2023-05-02 07:05 GMT   |   Update On 2023-05-02 07:05 GMT
  • தோப்பில் பிணமாக கிடந்ததால் பரபரப்பு
  • பல இடங்களில் வரன் பார்த்தும் திருமணம் அமையவில்லை

கன்னியாகுமரி :

தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அருண்குமார் (வயது 44).

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ராணிதோட்டம் டெப்போவில் மெக்கா னிக்காக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையா னார். இதனால் அருண்குமார் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு கூலி வேலை செய்து வந்த அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பல இடங்களில் வரன் பார்த்தும் திருமணம் அமையவில்லை. இந்த நிலையில் அருண்குமார் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்று அருகில் உள்ள தென்னந்தோப்பில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

நேற்று பெய்த பலத்த மழையால் யாரும் வெளியே வராத நிலையில் குளிரில் நடுங்கி சம்பவ இடத்திலேயே அருண்குமார் பரிதாபமாக இறந்தார். இன்று காலை உறவினர்கள் அவரை தேடிய போது தான், தென்னந்தோப் பில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்மந்தமாக அவரது தாயார் ஒமனா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News