உள்ளூர் செய்திகள்

குமரிக்கு நாளை வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

Published On 2022-09-06 10:03 GMT   |   Update On 2022-09-06 16:53 GMT
  • அமைச்சர் மனோதங்கராஜ்-மேயர் மகேஷ் கூட்டறிக்கை
  • தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

நாகர்கோவில்:

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாத யாத்திரை செல் கிறார். இந்த நிகழ்ச்சி நாளை கன்னியாகுமரியில் தொடங்குகிறது. இந்த பாத யாத்திரையை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக் கிறார். இது குறித்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாள ருமான மனோதங்கராஜ், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான வக்கீல் மகேஷ் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கன்னியாகுமரியில் நடை பெறும் காங்கிரஸ் பேரியக் கத்தின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாத யாத்திரை நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக நாளை (7-ந்தேதி) குமரிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குமரி வருகிறார். குமரி வருகை தருவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். அங்கிருந்து சாலை மார்க்க மாக குமரிக்கு வருகை தரும் தமிழக முதல்-அமைச்சருக்கு குமரி எல்லையான காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் வைத்து குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் எங்களது தலைமையில் காலை 11 மணிக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ஆகவே குமரிக்கு வருகை தரும் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சரை வரவேற்பதற் காக மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளைக்கழக நிர்வாகிகளும் மற்றும் அனைத்து அணிகளின் நிர் வாகிகளும், பொதுமக்க ளும் பெருந்திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளிக்க வேண்டும் எனவும், அதன்பிறகு மாலையில் நடைபெறும் ராகுல்காந்தி யின் பாதயாத்திரை நிகழ்ச்சி யில் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி யிலும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் அவர்கள் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News