- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
- திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது.
நேற்று இரவு மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. இன்று காலையில் மழை நீடித்தது. மார்த்தாண்டம், தக்கலை, குலசேகரம் பகுதி களில் மழை கொட்டி தீர்த்தது. மேலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.அவ்வப் போது மழை பெய்தது.
காலையில் பெய்த மழை யின் காரணமாக பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள் குடைபிடித்த வாறு பள்ளிக்கு சென்ற னர். நாகர்கோவிலில் கொட்டி தீர்த்து வரும் மழை யின் காரணமாக கோட்டார் சாலை சேறும் சகதியு மாக காட்சி அளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளங் களில் மழைநீர் தேங்கி யுள்ளதால் வாகன ஓட்டி கள் கடும் அவதிக்கு ஆளாகி யுள்ளனர்.
பூதப்பாண்டி, களியல், கன்னிமார், குழித்துறை, குளச்சல், கோழிப்போர் விளை பகுதிகளிலும் மழை நீடித்தது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தொடர்ந்து வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. அருவி யில் குளிப்பதற்கு இன்று 3-ம் நாளாக தடை விதிக் கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பொதுப் பணித்துறை அதிகா ரிகள் அணைகளின் நீர்மட் டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார் கள்.
தச்சமலை, தோட்ட மலை, மோதிரமலை மற்றும் மலையோர பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறையாறு, வள்ளியாறு, பரளியாறு களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
சிற்றார்-1, சிற்றார்-2 அணைகளின் நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து கரையோர பொது மக்க ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட் டுள்ளது. பொதுப்பணித் துறை சார்பில் தண்டோரா மூலமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப் பட்டு வரு கிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வரு கிறார்கள். தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கி ளைகள் முறிந்து விழுந்தது. இதில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தாலுகா பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் சரிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தோவாளை, விளவங்கோட்டில் தலா ஒரு வீடு இடிந்து விழுந்தது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.30 அடியாக உள்ளது. அணைக்கு 1078 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 250 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி நீர்மட்டம் 64.15 அடியாக உள்ளது. அணைக்கு 757 அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 33.30 அடியாக உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 10.40 அடியாக உயர்ந்துள்ளது.
குமரி மாவட்டம் முழுவ தும் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக கோழிப்போர் விளையில் 34.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை-13.6, பெருஞ்சாணி-25.8, சிற்றார்-1-17.2, சிற்றார்-2-19.4, பூதப்பாண்டி-11.4, களியல்-24.8, கன்னிமார் -14.2 கொட்டாரம்-2.4, குழித்துறை-23.4, மயிலாடி- 3.2, நாகர்கோவில்-10.6, சுருளோடு-13.4, தக்கலை- 22.2, குளச்சல்-12.6, இரணியல்-27, பாலமோர்-29.4, மாம்பழத்துறையாறு- 19, திற்பரப்பு-19.4 ஆரல்வாய்மொழி 2.2 கோழிப்போர் விளை-34.6 அடையாமடை 16.2 குருந்தன்கோடு-25.8 முள்ளங்கினாவிளை-32.6 ஆணைக்கிடங்கு-16 முக்கடல்-9.2.