உள்ளூர் செய்திகள் (District)

நன்னியூர் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

Published On 2022-09-26 06:53 GMT   |   Update On 2022-09-26 06:53 GMT
  • நன்னியூர் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
  • சாதி பாகுபாடு காட்டுவதாக பெண் ஊராட்சித் தலைவர் புகார்

கரூர்:

கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியம் நன்னியூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுதா(30). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், தன் மீது சாதிரீதியான பாகுபாடு காட்டப்படுவதாக அளித்த புகாரின்பேரில், கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

போலீஸில் புகார்

அதைத் தொடர்ந்து, "ஊராட்சியில் தனது கடமையை செய்ய விடாமல் குறுக்கீடு செய்வது, சாதி ரீதியான பாகுபாடு காட்டுவது, ஊராட்சியின் முன்னாள் தலைவர் குமாரசாமி அடிக்கடி அலுவலகத் துக்கு வந்து அலுவலகப் பணி யில் இடையூறு ஏற்படுத்தி வருவது,

அலுவலகப் பணியில் ஊராட்சி செயலாளர் ஒத்துழைப்பு அளிக் காதது, 100 நாள் வேலைத் திட்ட பொறுப்பாளராக செயல்படும் ஊராட்சி செயலரின் கணவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டருக்கான ஊதியத்தை தனக்கு தருமாறு நிர்பந்தம் செய்வது உள்ளிட்ட புகார்களை கூறி, உரிய நட வடிக்கை எடுக்குமாறு வாங்கல் போலீசில் சுதா புகார் அளித்தார்.

இதையடுத்து, ஊரக வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) லீலா குமார் மற்றும் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜயலட்சுமி உள்ளிட்டோர் நன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த 23-ந் தேதி சுதாவிடம் விசாரணை நடத்தினர். மேலும், வாங்கல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் முன்னிலையிலும் விசாரணை நடத்தப்பட்டது.

வழக்கு பதிவு

இதைத் தொடர்ந்து, நன்ளியூர் ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் நல்லசாமி(40), ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் குமாரசாமி(58), ஊராட்சி செயலாளர் நளினி(38), 100 நாள் வேலைத் திட்ட பொறுப்பாளர் மூர்த்தி(42) ஆகியோர் மீது ஆபாசமாக திட்டுதல், பெண் வன்கொடுமை மற்றும் பட்டியலின மற்றும் பட்டியல் பழங் குடியின வன்கொடுமை சட்டத்தின் கீழ் வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, நன்னியூர் ஊராட்சி மன்ற செயலாளர் நளினியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. உத்தரவிட்டார்

Tags:    

Similar News