உள்ளூர் செய்திகள்

ஜவஹர் பஜாரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Published On 2023-02-10 09:44 GMT   |   Update On 2023-02-10 09:44 GMT
  • ஜவஹர் பஜாரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
  • பஜார் சாலையில் வர்த்தக நிறுவனங்களை சார்ந்தவர்கள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

கரூர்:

கரூர் நகரத்தில், ஜவஹர் பஜார், தாலுகா அலுவலகம், கிளை சிறை, மாவட்ட தொழில் மைய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், வங்கிகள், நகைக்கடை, ஜவுளி கடை, லாட்ஜ்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால், ஜவஹர் பஜாரில் தினமும் இரவு 11மணி வரை போக்குவரத்து இருக்கும். பஜார் சாலையில் வர்த்தக நிறுவனங்களை சார்ந்தவர்கள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். குறிப்பாக, மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நடை பாதையை ஆக்கிரமித்துள்ளதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து புகார்கள் சென்றன. அதன்படி, மாநகராட்சி ஊழியர்கள், ஜவஹர் பஜார் சாலை நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் உட்பட அனைத்து பொருட்களும் அப்புறப்படு த்தப்பட்டன.




Tags:    

Similar News