உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட காட்சி.

சிவகிரியில் பிரணா யோகா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

Published On 2023-04-08 08:33 GMT   |   Update On 2023-04-08 08:33 GMT
  • தாய்லாந்தில் நடக்கக்கூடிய யோகா போட்டியில் கலந்து கொள்ள 10 பேர் தேர்வாகினர்.
  • நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார்.

சிவகிரி:

சிவகிரி பிரணா யோகா பயிற்சி பள்ளியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகள் யோகா பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் மாவட்ட அளவில் பல்வேறு யோகா போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனர். கடந்த மாதம் திருப்பூரில் நடந்த யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவ - மாணவிகள் கந்தராசனம், மயூராசனம், சிரசாசனம், விருச்சிக ஆசனம், ஏகபாத சிரசாசனம், கிருஷ்ண கோகுல் ஆசனம், பத்ம மயூராசனம், ராஜகபட ஆசனம், மனித கோபுரம் என பல்வேறு விதமான யோகாவை செய்து தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி மே மாதம் சர்வதேச அளவில் தாய்லாந்தில் நடக்கக்கூடிய யோகா போட்டியில் கலந்து கொள்ள 10 பேர் தேர்வாகினர்.

கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் மாணவ - மாணவிகளை பாராட்டி நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லட்சுமிராமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை மாஸ்டர் அருண்குமார் தொகுத்து வழங்கினார். சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் மாணவர்களுக்கு நினைவு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். தாய்லாந்தில் நடைபெறக்கூடிய யோகா போட்டியில் மாணவர்கள் வெற்றி பெற தி.மு.க. மாவட்ட மாணவரணி சுந்தரவடிவேலு, கவுன்சிலர்கள் விக்னேஷ் ராஜா, செந்தில்குமார், மருதவள்ளி, ரத்தினராஜ், சித்ராதேவி, பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரணா யோகா பயிற்சி பள்ளி ஆசிரியர் அருண்குமார் செய்திருந்தார்.

Tags:    

Similar News