உள்ளூர் செய்திகள்

சோழவந்தான் பள்ளியில் ஆசிய சாம்பியன் ஆடவர் ஆக்கி போட்டிக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.

ஆசிய சாம்பியன் ஆடவர் ஆக்கி போட்டி கோப்பை அறிமுக விழா

Published On 2023-07-25 08:12 GMT   |   Update On 2023-07-25 08:12 GMT
  • சோழவந்தானில் ஆசிய சாம்பியன் ஆடவர் ஆக்கி போட்டி கோப்பை அறிமுக விழா நடந்தது.
  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா இணைந்து நடத்துகிறது.

சோழவந்தான்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா இணைந்து நடத்தும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான 7-வது ஆடவர் ஆக்கி போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சென்னையில் நடை–பெற உள்ளது. இந்த போட் டியில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொ–ரியா, ஜப்பான், சீனா, மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக் கோப்பை தமிழ்நாடு முழுவ–தும் வலம் வர உள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த 20-ந்தேதி சென்னை மெரினா–வில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச் சர் உதயநிதி ஸ்டா–லின் அறிமுக விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதன் தொடர் நிகழ்வாக சோழவந்தான் கல்வி சர்வ–தேச பொதுப்பள்ளி மைதா–னத்தில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் வெற்றி கோப்பையை அறி–முகம் செய்யும் விழா நடந்தது. இவ்விழாவில் கல்வி குழுமம் தலைவர் டாக்டர். செந்தில்குமார் உதவி தலைமை ஆசிரியர்கள் அபி–ராமி, டயானா, பள்ளி மாணவர் தலைவர் அர்ஜூன், பள்ளி மாணவர் துணை தலைவர் பொற்கலை ரிஷிகா, பள்ளி விளையாட்டுத்துறை அமைச்சர் கௌஷிக், பள்ளி விளையாட்டுத்துறை துணை அமைச்சர் சனோஜ் மற்றும் ஆசிரியர், ஆசிரி–யைகள், மாணவ, மாணவி–கள் பங்கேற்றனர்.

முன்னதாக கோப்பையை மாணவர்கள் கொடி பிடித்து ஊர்வலமாக மைதானத்திற்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து கோப்பை தேனி மாவட்டத் திற்கு தொடர்ந்து பயணித்தது.

Tags:    

Similar News