உள்ளூர் செய்திகள்

இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

Published On 2023-03-11 08:22 GMT   |   Update On 2023-03-11 08:22 GMT
  • இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
  • திருவாதவூர் முடக்கு சாலையில் இருந்து மதுரை சாலை வரை இந்த போட்டி நடந்தது.

மேலூர்

மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி உற்சவம் நடந்தது. இதையொட்டி இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. முதலில் நடுமாடு போட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

இந்த மாட்டு வண்டி போட்டியில் 21 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. நடுமாடுகளுக்கான 8 மைல் தூரத்திற்கு போட்டி நடந்தது. ஜல்லிக்கட்டு பேரவையின் தமிழ்நாடு தலைவர் டாக்டர்

பி.ராஜசேகரன் மற்றும் திருவாதவூர் கிராமத்தார்கள் மற்றும் திருவாதவூர் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

நடுமாட்டு போட்டியில் ரூ. 30 ஆயிரத்து 1-யை திருவாதவூர் அருகே உள்ள கழுங்குபட்டியை சேர்ந்த கண்ணன் மாட்டு வண்டி வென்றது. 2-வது பரிசாக ரூ.25 ஆயிரத்து1-யை அ.வல்லா ளப்பட்டி மகாவிஷ்ணு வண்டியும், 3-வது பரிசு ரூ.20ஆயிரத்து 1-யை கோட்ட நத்தம்பட்டி ரவி மற்றும் திருவாதவூர் எஸ்.எம். பிரதர்ஸ் ஆகியோர் வண்டியும், 4-ம் பரிசு 12 ஆயிரத்து 1-யை திருவாதவூர் தன்வந்த் பிரசாந்த் வண்டியும் வென்றன.

வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்க ளுக்கு விழா கமிட்டியா ளர்கள் பரிசுகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து இன்று காலை பெரிய மாடு, சின்ன மாடு, போட்டி நடந்தது. திருவாதவூர் முடக்கு சாலையில் இருந்து மதுரை சாலை வரை இந்த போட்டி நடந்தது.

Tags:    

Similar News