உள்ளூர் செய்திகள்

கொடியேற்றப்பட்ட கொடிமரத்துக்கு தீபாராதனை நடந்தது.

ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்

Published On 2023-05-24 07:53 GMT   |   Update On 2023-05-24 07:53 GMT
  • ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினர்.

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு வைகாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும். திருவிழா 17 நாட்கள் நடக்கிறது.

இந்த ஆண்டுக்கான கொடியேற்றம் நடந்தது. அர்ச்சகர் சண்முகவேல் கொடி மற்றும் பொருட்களுடன் மேளதாளம் முழங்க 4 ரத வீதிகளில் வலம் வந்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் திருவிழா கொடியேற்றும் விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

திருவிழா கொடியேற்ற உபயதாரர் சிங்கம் என்ற மந்தையன் சேர்வை குடும்பத்தினர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். கொடியேற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவில் செயல்அலுவலர் இளமதி, தக்கார் சங்கரேசுவரி, பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த், பெருமாள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.

சுகாதாரப்பணி, குடிநீர்வசதி, கூடுதல் தெரு விளக்கு ஏற்பாடுகளை சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பால்குடம், அக்னிச் சட்டி, பூக்குழி இறங்குதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினர்.

Tags:    

Similar News