உள்ளூர் செய்திகள்

காலை உணவு விரிவாக்க திட்டத்தை மணிமாறன் தொடங்கி வைத்தார்

Published On 2023-08-26 08:57 GMT   |   Update On 2023-08-26 08:57 GMT
  • அம்மாபட்டி அரசு பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை மணிமாறன் தொடங்கி வைத்தார்.
  • அரசு பள்ளி மாணவர்களின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என்றார்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள அம்மாபட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கி வைக்கப் பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் குமரேசன் தலைமை வகித்தார். துணை தலைமை யாசிரியர் பாண்டி வரவேற்றார்.

மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மணிமாறன் திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தற்போது படிப்பு முடித்து பெரிய பதவிகளுக்கு வருகின்றனர். மாண வர்களின் மருத்துவ படிப்புக்கு தடையாக உள்ள நீட் தேர்வினை ரத்து செய்ய தமிழக முதல்வர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். அரசு பள்ளி மாணவர்களின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என்றார். முடிவில் ஆசிரியர் காசிமாயன் நன்றி கூறினார்.

திருமங்கலம் ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி யன், ஆலம்பட்டி சண்முகம், மாவட்ட கவுன்சிலர் ஜெய ராஜ், ஒன்றிய துணை செயலாளர் முத்துபாண்டி, தகவல் தொழில்நுட்ப மதுரை மண்டல அமைப்பா ளர் பாசபிரபு, திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான், நகரப் பொரு ளாளர் சின்னச்சாமி, நகராட்சி கவுன்சிலர் திருக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News