உள்ளூர் செய்திகள்

கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Published On 2022-07-04 07:23 GMT   |   Update On 2022-07-04 07:23 GMT
  • திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
  • துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக மாணவிகள் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1800 மாணவிகள் பயின்று வருகின்றனர்.

திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக விளங்கக்கூடிய அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கழிவுநீர் செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இன்றி பாதாள சாக்கடை வழியாக பள்ளி வளாகத்திற்குள் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது என்று மாணவிகள் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர், நகராட்சி ஆணையாளருக்கு புகார் தெரிவித்தார். அதன் பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து மாணவிகள் கூறியதாவது:-

கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் செல்லக்கூடிய பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவறையில் இருந்து வரக்கூடிய தண்ணீர் அனைத்தும் வெளியேறி பள்ளி வளாகத்தில் தேங்கி உள்ளது. அங்கிருந்து துர்நாற்றம் வீசுவதால் மதிய வேளையில் உணவு உண்ண கூட முடியாத சூழ்நிலை உள்ளது.

மைதான பகுதியில் தண்ணீர் தேங்கி இருப்பதால் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே சம்பந்தப்பட்டநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கி கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News