உள்ளூர் செய்திகள் (District)

சோழவந்தான், வாடிப்பட்டியில் வள்ளலார் தினம்

Published On 2023-10-06 08:06 GMT   |   Update On 2023-10-06 08:06 GMT
  • சோழவந்தான், வாடிப்பட்டியில் வள்ளலார் தினம் கொண்டாடப்பட்டது.
  • இதில் பக்தர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சோழவந்தான்

சோழவந்தான் சன்மார்க்க சங்கம் சார்பாக வள்ளலார் பிறந்த தின விழா கொண்டா டப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு புஷ்பலதா மணிகண்டன் ஜோதி விளக்கேற்றினார். வள்ளலார் படம் அலங்கரிக்கப்பட்டு சன்மார்க்க சங்கத்தினர் நகர்வலம் வந்தனர். அகழ் பாராயணம் நடந்து வள்ளலாரும் வள்ளுவரும் என்ற தலைப்பில் கம்பம் மொக்கச்சாமி பக்தி சொற்பொழிவாற்றினார். சன்மார்க்க சங்கத்தின் நிறுவனத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி விழாவிற்கு தலைமை தாங்கினார்.

செயலாளர் நல்லுச்சாமி, இணைச் செயலாளர் நாகையா, ஆலோசகர் மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். சங்கத்தின் மகளிர் அணி செயலாளர் சாந்தி ஜோதி வழிபாடு நடத்தினார். இதைத் தொடர்ந்து இங்கு உள்ள அய்யப்பன் கோவிலில் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக அன்ன தானம் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்ட மடக்கி கண்மாய்கரையில் இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலையடிவாரத்தில் 36 அடி உயர லிங்கவடிவிலான அண்ணாமலையார் கோவிலில் வள்ளலார் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. இந்தவிழாவை யொட்டி ராமலிங்கவள்ளலாருக்கு திருவருட்பா பாடி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இந்தபூஜைகளை மிளகாய்பொடி சாமியார் அங்க முத்து, கிருஷ்ணன் ஆகியோர் செய்தனர். இந்தவிழாவிற்கு மனவளக்கலை மன்ற தலைவர் மணவாளன் தலைமை தாங்கினார். உலக நலசத்தியஞான சித்தாந்தசபை நிர்வாகி பழக்கடைபாண்டி முன்னிலை வகித்தார். ஜோதிடர் ஆனந்தன் வர வேற்றார். அண்ணா மலை யார் கோவில் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜேஸ்வரி கோபிநாத் அன்னதானம் வழங்கினார். இதில் பக்தர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News