டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கலந்துரையாடல்
- மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நடந்தது.
- அப்துல் கலாமின் பொன்வரிகளான கனவு காணுங்கள் என்பதை மேற்கோள் காட்டி எம்.கே.ஜானகிராமன் பேசினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவரும், உளவியலாளரும், ஊக்கமளிக்கும் பேச்சாளரும், ஓமன் சலாலாவில் இந்திய கவுன்சில் கிளப்பிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவருமான டாக்டர் எம்.கே.ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பொன்வரிகளான கனவு காணுங்கள், தூக்கத்தில் வருவது அல்ல கனவு, நம்மை தூங்க விடாமல் செய்வதே கனவு என்று மேற்கோள் காட்டி பேசினார். மேலும் மாணவர்கள் வாழ்க்கையில் சாதிப்பதற்கு தொடர்புத்திறன், தன்னம்பிக்கை, சுய உந்துதல், நேர மேலாண்மை, ஒழுக்கம் போன்ற நற்பண்புகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, கணித துறை தலைவி வாசுகி, வேதியியல் துறை பேராசிரியர் ஜோதி ஸ்டெல்லா ஆகியோர் செய்து இருந்தனர்.