உள்ளூர் செய்திகள் (District)

 விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

பரமத்தி வட்டார வேளாண், உழவர் நலத்துறை சார்பில் சிறுதானிய சாகுபடி பயிற்சி முகாம்

Published On 2022-09-26 07:46 GMT   |   Update On 2022-09-26 07:46 GMT
  • சிறுதானியங்களை சாகுபடி செய்வதற்கான விவசாயிகள் பயிற்சி முகாம் வில்லிபாளையம் மற்றும் பிள்ளைகளத்தூர் கிராமங்களில் நடைபெற்றது.
  • இந்த முகாமில் நீர் பாசனம், சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களை சாகுபடி செய்வதற்கான விவசாயிகள் பயிற்சி முகாம் வில்லிபாளையம் மற்றும் பிள்ளைகளத்தூர் கிராமங்களில் நடைபெற்றது.

இதில் ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ராஜா பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, வேளாண்மை அலுவலர் பாபு, வேளாண்மை உதவி இயக்குநர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு சிறுதானிய விவசாயத்தில் கிடைக்கும் கூடுதல் வருமானம், பயிர் சாகுபடி முறைகள், நீர் பாசனம், சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

மேலும் மானிய விலையில் இடுபொருட்கள்-விதைகள், மருந்து மற்றும் நுண்ணூட்ட உரக்கலவைகள், சிறுதானிய விற்பனை, லாபம் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரகுபதி மற்றும் பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News