உள்ளூர் செய்திகள் (District)

கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆற்றங்கரை சீரமைக்கும் பணி நடந்து வருவதை படத்தில் காணலாம்.

கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணைஆற்றங்கரை சீரமைக்கும் பணி தீவிரம்

Published On 2022-08-12 09:06 GMT   |   Update On 2022-08-12 09:06 GMT
  • கிருஷ்ணகிரி அணை நிரம்பியதும் உபரி நீர் சாத்தனூர் அணைக்கு திறந்துவிடப்படும்.
  • கிருஷ்ணகிரி அணை நிரம்பியதும் உபரி நீர் சாத்தனூர் அணைக்கு திறந்துவிடப்படும்.

கடலூர்:

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணை நிரம்பியதும் உபரி நீர் சாத்தனூர் அணைக்கு திறந்துவிடப்படும். இந்த தண்ணீர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர், பண்ருட்டி வழியாக கடலூர் ஆல்பேட்டையில் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றை நம்பி ஏராளமான ஏரி குளங்கள் உள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் சாத்தனூர், கிருஷ்ணகிரி அணை நிரம்பி வழிந்தது. எனவே தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒரே சமயத்தில் 1.20 லட்சம் கனஅடி நீர் வந்ததால் தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆற்றின் கழிமுக பகுதியான கடலூர் நகரம் ஆற்று வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளானது. குறிப்பாக கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. நாணமேடு, உச்சிமேடு, கண்கடகாடு, தாழங்குடா பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளம் வடிந்ததால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்தனர்.

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கிருஷ்ணகிரி அணை நிரம்பியது. எனவே உபரி நீர் அணைத்தும் சாத்தனூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. இந்த அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் சீறிபாய்ந்து நேற்று பன்ருட்டி அருகே கண்டரக்கோட்டை பகுதி வந்து சேர்ந்தது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தபடி உள்ளது. எனவே ஆற்றங்கரை பகுதியில் உள்ள கரைகள் அணைத்தும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தரைப்பாலம் பகுதியில் கற்கள் கொட்டப்பட்டு கரைகள் சீரமைக்கும்பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணியை மாவட்ட வருவாய்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News