உள்ளூர் செய்திகள் (District)

சேலத்தில் 44 ரேசன் கடை விற்பனையாளர்களுக்கு அபராதம்

Published On 2022-06-19 07:42 GMT   |   Update On 2022-06-19 07:42 GMT
சேலத்தில் 44 ரேசன் கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் அனைத்து ரேசன் கடைகளிலும் ஆய்வு செய்ய மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து கூட்டுறவு சார்பதிவாளர்கள் கொண்ட குழுவினர் கடந்த 2 நாட்களாக சேலம் டவுன், கிச்சிப்பாளையம், எருமாபாளையம் பகுதிகளில் செயல்படும் 26 ரேசன் கடைகளில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இதில் 24 கடைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கடை விற்பனையாளர்களுக்கு மொத்தமாக ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதுபோல் ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி பகுதிகளில் செயல்படும் 24 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 20 ரேசன் கடைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனால் அந்த கடை விற்பனையாளர்களுக்கு மொத்தமாக ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் விதிப்புக்குள்ளான ரேசன் கடை விற்பனையாளர்கள் உடனடியாக வேறு பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்ததாவது:-

சேலத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் ரேசன் கடைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. எத்தனை ரேசன் கார்டுகள் உள்ளன? எவ்வளவு அரிசி இருப்பு உள்ளது?அனைத்து கார்டுகளுக்கும் ஒவ்வொரு மாதமும் முறையாக அரிசி வழங்கப்படுகிறதா? ஒவ்வொரு மாதமும் எத்தனை கிலோ அரிசி வழங்கப்படுகிறது?, பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள ரேசன் அரிசி இருப்பு உள்ளதா? என ஆய்வு செய்கிறோம். இது குறித்து விற்பனையாளர்களிடமும் கேள்விகள் கேட்கப்படுகிறது.

இதேபோல் சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவுகளும் சரியான முறையில் வழங்கப்படுறதா? எனவும் ஆய்வு செய்கிறோம். ரேசன் கடையை முறையாக பராமரிக்காத, அரசு விதிமுறைகளை சரியாக பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News