- பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது
- இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
பெரம்பலூர்
பெரம்பலூரில் நேற்று காலை முதல் மதியம் வரை இதமான தட்பவெப்பநிலை நிலவியது. மதியத்திற்கு பிறகு வானில் கருமேகங்கள் திரண்டு 1.45 மணி அளவில் பலத்த மழை கொட்டியது. பின்னர் சிறிது நேரம் இடைவெளிவிட்டு 3.30 மணியளவில் மீண்டும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு மழைநீர் தேங்கியது. பின்னர் விட்டுவிட்டு மழை பெய்தது. பெரம்பலூர் பகுதியில் ஏற்கனவே ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், நேற்று பெய்த மழையால் நீர்நிலைகள் நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிராமப்புறங்களில் நெல், மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் கதிர்முற்றியுள்ளன. அவை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்யப்பட உள்ள நிலையில், இந்த மழையால் அந்த பயிர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்