பிளஸ்-1 தேர்வு முடிவுகள்-கோவை மாவட்டத்தில் 94.63 சதவீதம் பேர் தேர்ச்சி
- கோவை மாநகர் பொள்ளாச்சி, எஸ். எஸ். குளம் ,பேரூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளது.
- இந்த ஆண்டு வெளியான பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவில் மாநில அளவில் கோவை மாவட்டம் 5-வது இடத்தை பிடித்துள்ளது.
கோவை :
தமிழகத்தில் பிளஸ் 1- பொதுத்தேர்வு முடி–வுகள் இன்று காலை வெளியானது.
கோவை மாவட்டத்தில் கோவை மாநகர் பொள்ளாச்சி, எஸ். எஸ். குளம் ,பேரூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளது. இந்த கல்வி மாவட்டங்களில் கடந்த மாதம் நடந்த பிளஸ்-1 பொதுத்தேர்வினை அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என 365 பள்ளிகளைச் சேர்ந்த 16ஆயிரத்து 631மாணவர்களும், 18 ஆயிரத்து 949 மாணவிகள் என மொத்தம் 35 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிந்ததை தொடர்ந்து திருத்தும் பணிகள் நடந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய வர்களில், 15 ஆயிரத்து 222 மாண வர்களும், 18ஆயி ரத்து 448 மாணவிகளும் என மொத்தம் 33 ஆயிரத்து 670 பேர் பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள னர்.
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.53, மாணவிகள் தேர்ச்சி வீதம் 97.36 என மொத்தமாக கோவை மாவட்டம் 94.63 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த ஆண்டு வெளியான பிளஸ்-1 பொதுத் தேர்வு முடிவில் மாநில அளவில் கோவை மாவட்டம் 5-வது இடத்தை பிடித்துள்ளது.
தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதுதவிர மாணவ, மாணவிகளின் செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது. பள்ளிகளிலும் தேர்ச்சி விவரம் ஓட்டி வைக்கப்பட்டிருந்தது. பள்ளிக்கு வந்திருந்த மாணவ, மாணவிகள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை தோழிகளுடன் இணைந்து பார்வையிட்டனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.