திருவாரூரில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
- 52 மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- வருவாய் தொடர்பான பிரச்சனைகள் குறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில்நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதில் நேரடியாக வழங்கப்பட்ட 27 மனுக்களுடன் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்ட காவல்துறை தொடர்பான மனுக்கள் 25 உள்ளிட்ட 52 மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
மேலும் சொத்து பிரச்சனை, குடும்ப தகராறு, வருவாய் தொடர்பான பிரச்சனைகள் குறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது.
இந்த முகாமில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஈஸ்வரன், வெள்ளைத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.