உள்ளூர் செய்திகள் (District)

காட்டுப்புத்தூர் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை

Published On 2023-11-23 04:27 GMT   |   Update On 2023-11-23 04:27 GMT
  • மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்டுப்புத்தூர் வாய்க்காலை தூர்வார அறிவுறுத்தப்பட்டு உள்ளது
  • புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவு

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சி, தொண்டைமான்நகர் பகுதியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் நகர்புற வீடற்றோர்க ளுக்கான இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தினை நேசக்கரம் தொண்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இவ்வில்லத்தில் 35-க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்கி வருகின்றனர். இங்கு தங்கி உள்ளவர்களுக்கு தேவை யான குடிநீர், உணவு, மருத்துவம் உள்ளிட்ட வைகள் போதுமான அள வில் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில், தொடர்ந்து மழையின் காரணமாக மழைநீர் வெள்ள பாதிப்பு களை தவிர்க்கும் வகையில் காட்டுப்புதுக்குளம் வாய்க்காலில் சேர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை தூர்வாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ள நகராட்சி அலுவ லர்க ளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வுகளின்போது, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட சமூகநல அலுவ லர்கோகுலப்பிரியா, வட்டாட்சியர் கவியரசன், நகராட்சி அலுவலக மேலா ளர் காளியம்மாள் மற்றும் அரசு அலுவலகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News