தமிழ்நாடு (Tamil Nadu)

சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது- முதலமைச்சர்

Published On 2024-10-19 05:15 GMT   |   Update On 2024-10-19 05:18 GMT
  • போதைப்பொருள் இல்லா மாநிலமாக திகழ நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
  • வதந்திகளை கட்டுப்படுத்த மற்ற மாநில போலீசாரின் ஒத்துழைப்பு அவசியம்.

சென்னை கிண்டியில் தென்பிராந்திய காவல் துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* போதைப்பொருள் இல்லா மாநிலமாக திகழ நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

* போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்துகள் பல மாநிலங்களில் உள்ளது. அதை பறிமுதல் செய்யவே இந்த மாநாடு.

* போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கைது மட்டுமல்லாமல் போதைப்பொருள் குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் போதைப்பொருள் நுழைவதை தடுக்க காவல் துறையினர் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.

* ஏடிஎம்-களில் கொள்ளையடித்து தப்பியவர்களை தமிழ்நாடு காவல் துறை சுட்டு பிடித்தது, அவர்களை பாராட்டுகிறேன்.

* சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

* படித்த இளைஞர்களை சைபர் கிரைம் மூலம் அடிமையாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

* பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பை நிலைநாட்ட வேண்டும்.

* பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவோரை பல மாநிலங்களுக்கு சென்று கண்டுபிடித்து வருகிறோம்.

* வதந்திகளை கட்டுப்படுத்த மற்ற மாநில போலீசாரின் ஒத்துழைப்பு அவசியம்.

* மாநில எல்லைகளில் கடுமையான சோதனைகள் மேற்கொள்வது அவசிய தேவையாகிறது.

* எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் அதிநவீன கேமராக்கள் பயன்படுத்தினால் கடத்தல்களை தடுக்க முடியும்.

* புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News