கீழவலசை கிராமத்துக்கு முதல் முதலாக பஸ்கள் இயக்கம்
- கமுதி அருகே உள்ள கீழவலசை கிராமத்துக்கு முதல் முதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.
- பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பஸ் வசதி செய்து தர ஏற்பாடு செய்தார்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் ஊராட்சி கீழவலசை கிராமத்திக்கு சுதந்திர பெற்ற காலத்தில் இருந்து பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து கீழவலசை கிராம மக்கள் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜ கண்ணப்பனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று அமைச்சர் ராஜகண்ணப்பன் உடனடியாக அதிகாரியிடம் பேசி கீழவலசை கிராமத்திற்கு பஸ் வசதி செய்து தர ஏற்பாடு செய்தார்.
அதன்படி கீழவலசை கிராமத்திற்கு முதன்முதலாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், மாவட்ட கவுன்சிலர் பெருநாழி போஸ் சசிகுமார், பேரையூர் ஊராட்சி மன்ற தலைவர் ரூபி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பாண்டி, ஒன்றிய துணை செயலாளர் நேதாஜி சரவணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கொடி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, புதுக்கோட்டை முத்துராமலிங்கம், கமுதி வட்டார காங்கிரஸ் தலைவர் பழக்கடை ஆதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.