உள்ளூர் செய்திகள்

அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்-வேளாண் அதிகாரி

Published On 2023-09-02 06:55 GMT   |   Update On 2023-09-02 06:55 GMT
  • அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும் என்று வேளாண் அதிகாரி கூறினார்.
  • அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் பணிகள் தொடங்க உள்ளன. எனவே விவசாயி களுக்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்வதோடு மட்டுமன்றி போதிய அளவு இருப்பும் உள்ளது. மாவட்டத்தில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு நெல் விதையின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட் டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள விவசாயிகள் அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நல்ல லாபகர மான வேளாணமைக்கு நல்ல விதை ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, ஒருங்கி ணைந்த பயிர் பாதுகாப்பு ஆகியன இன்றியமையாதது. இதில் முக்கியமானது ஆதார நல் விதையாகும்.

நல்ல விதை அல்லது தரமான விதை எனப்படு வது பாரம்பரிய குணங்க ளையும் அதிக பட்ச முளைப்புத்திறனையும் பெற்றிருக்கும். பிற ரகங்கள் மற்றும் களை செடிகளின் விதை இல்லாமலும் பூச்சி நோய் தாக்கம் இல்லாமலும் மண் மற்றும் செடிகளின் பாகங்கள் இல்லாமல் விதை சான்றுத் துறையால் சான்று செய்யப்படும் விதைகளாக இருக்க வேண்டும்.

வல்லுநர் விதை (மஞ்சள் அட்டை பொருத்தப்பட்டது) மற்றும் ஆதார நல் விதை (வெள்ளை அட்டை பொருத்தப்பட்டது) உபயோகித்து விவசாயியின் வயலின் உற்பத்தியாளரால் சாகுபடி செய்யப்படுகிறது. பயிர் பூக்கும் தருணத்தில் 15 நாட்கள் முன்னதாக விதை சான்றளிப்புத் துறை யால் விதைப்பண்ணையாக பதிவு செய்யப்படுகிறது.

விதைப்பண்ணை பூக்கும் தருணத்திலும், முதிர்ச்சி பருவத்திலும் விதைச்சான்று அலுவ லரால் வயலில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வின்போது வயல் தரம் மற்றும் விதைத்தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டுமே விதைப் பண்ணைகளில் இருந்து விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கு கழிவுகள் நீக்கப்பட்டு சுத்த மான ஒரே மாதிரியான விதைகள் பிரிக்கப்படு கின்றன.

இது தவிர சுத்திகரிக்கப் பட்ட விதைக் குவியல்களில் விதை மாதிரி எடுக்கப்பட்டு விதை பரிசோதனை நிலை யத்திற்கு அனுப்பப் படுகிறது. பகுப்பாய்வில் தேறிய விதைக் குவியலுக்கு சான்றட்டை பொருத்தப் பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. எனவே விவசாயிகள் இதை முழுமையாக தெரிந்து கொண்டு சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன் படுத்தி பலன் அடைய லாம்.

மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரி வித்துள்ளார்.

Tags:    

Similar News