- தர்கா சந்தனக்கூடு விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.
- சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
பசும்பொன்
கமுதியில் பிரசித்தி பெற்ற முஸாபர் அவுலியா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருட சந்தனக்கூடு திருவிழா கடந்த 18-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் நள்ளிரவு சந்தன கூடு திருவிழா நடைபெற்றது. முன்னதாக கமுதி- சுந்தரபுரம் தைக்கா வீட்டில் இருந்து இந்த சந்தன கூடு ஊர்வலம் புறப்பட்டது.தர்ஹா வின் நிர்வாக தலைவரும், பேரூராட்சி தலைவருமான அப்துல் வஹாப் சகாராணி மலர்களால் அலங்கரிக் கப்பட்ட சந்தன குடத்தை, அலங்கார மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட சந்தன கூட்டில் வைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஏராளமான முஸ்லிம் மற்றும் இந்துக்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தின் முன்பு இளைஞர்கள் தீப்பந் தாட்டம் சுற்றி கொண்டே சென்றனர். இரவு முழுவதும் முஸ்லிம் பஜார் மற்றும் முஸ்லிம் தெருக்கள் வழியாக சென்ற இந்த சந்தனக்கூடு ஊர்வ லம் அதிகாலை தர்ஹாவை வந்தடைந்தது. இந் நிகழ்ச்சியில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.