- தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோச வழிபாடு நடந்தது.
- தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை அன்ன பூரணேஸ்வரி சமேத ஸ்ரீ நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், பழம் பன்னீர், சந்தனம், இளநீர் விபூதி, அரிசி மாவு, தேன் பஞ்சாமிர்தம் மற்றும் அபிசேக பொடிகளால் நந்திக்கு சிறப்பு அபிஷேம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா வந்தது. இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். அபிஷேக பால் மற்றும் சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. வாசு, கருப்பசாமி ஆகியோர் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதே போல் திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர், எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர் தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.