உள்ளூர் செய்திகள்

தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் தொடங்கி வைத்தார். அருகில் நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி மற்றும் பலர் உள்ளனர்.

தூய்மை மக்கள் இயக்கம்

Published On 2022-06-05 09:49 GMT   |   Update On 2022-06-05 09:49 GMT
  • தூய்மை மக்கள் இயக்கத்தை முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
  • நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு முகக்கவசம் கையுறை வழங்கப்பட்டது.

பரமக்குடி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி, வைகை அரிமா சங்கம், உதயம் பவுண்டேசன் இணைந்து நகரங்களை தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது.

விழாவிற்கு நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி தலைமை வகித்தார். ஆணையாளர் திருமால் செல்வம், நகராட்சி பொறியாளர் அய்யனார், நகர்மன்ற துணைத்தலைவர் குணா முன்னிலை வகித்தனர். சுகாதார அலுவலர் ஜெயராமன் வரவேற்றார்.

பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்து துப்புரவு பணியில் ஈடுபட்டார். பரமக்குடி வைகை அரிமா சங்கம் சார்பில் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு முகக்கவசம் கையுறை வழங்கப்பட்டது.

இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தினேஷ்குமார் டேவிட், மதன், வைகை அரிமா சங்கத்தின் பட்டய தலைவர் பிச்சைமணி, சங்க தலைவர் மணிவண்ணன், செயலாளர் கவுதம், பொருளாளர் ராம்கி, நகர்மன்ற உறுப்பினர்கள் அப்துல்மாலிக், ஜெயசங்கர், துரை.சரவணன், நகராட்சி ஒப்பந்ததாரர்கள் பல.சரவணன், முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News