உள்ளூர் செய்திகள் (District)

முருகேசன்

கூடுதல் மாவட்ட கல்வி அலுவலகம் ஏற்படுத்த கோரிக்கை

Published On 2022-09-20 07:27 GMT   |   Update On 2022-09-20 07:27 GMT
  • கூடுதல் மாவட்ட கல்வி அலுவலகம் ஏற்படுத்த வேண்டுமென ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
  • 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடத்துவதிலும் குளறுபடிகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ராமநாதபுரம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முருகேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த காலங்களில் பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலைக்கல்விக்கு ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி என 2 கல்வி மாவட்ட அலுவலகங்களும், தொடக்கக்கல்விக்கு ராமநாதபுரம் முழுவதும் ஒரு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகமும் இயங்கி வந்தன. இவைகளை முழுமையாக கண்காணிக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் செயல்பட்டு வந்தது. கடந்த ஆட்சியில், தொடக்கக் கல்வித்துறையிலுள்ள பள்ளிகளை கண்காணித்து ஆய்வு செய்து வந்த மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை ரத்து செய்து விட்டு, மாவட்ட நிர்வாகத்தில் தனித்தனியாக இயங்கி வந்த பள்ளிக்கல்வி (இடைநிலைக்கல்வி) பள்ளிகள் மற்றும் தொடக்க க்கல்வி பள்ளிகளை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து, அதனை மாவட்டக்கல்வி அலுவலரே நிர்வாகம் செய்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக பல குளறுபடிகளுடன் இயங்கி வந்தன.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிக்கல்வி துறையிலுள்ள இடைநிலைக்கல்விக்கு மாவட்டத்திற்கு தேவையான மாவட்டக்கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்த ப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்ட த்தில் உயர்நிலை, மேல்நிலைப்ப ள்ளிகள் 196 பள்ளிகள் இயங்கி வருகின்றன. சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய ராமநாத புரத்தை மையமாக வைத்து அரசாணை 151 ன்படி ஓரே ஒரு மாவட்டக்கல்வி அலுவலகம் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட எல்லைகளிலுள்ள பள்ளிக ளுக்கும் மாவட்டக்கல்வி அலுவலகத்திற்க்கும் இடைப்பட்ட தூரம் மிக அதிகமாக இருக்கிறது, இதனால் மாணவர்களின் அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.

அதேபோல் பள்ளி ஆசிரியர்களின் பணப்பலன்க ளை பெற்று வழங்குவதிலும் தாமதம் ஏற்படும், மேலும் அலுவலக பணியாளர்களின் வேலையை ஆசிரியர்கள் செய்ய நேரிடும், இதனால் மாணவர்களின் கற்றல், கற்பித்தில் பணியில் இடர்பாடுகள் ஏற்படும், ஒரே ஒரு மாவட்டக்கல்வி அலு வலரால் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்வது என்பது இயலாத காரியம். மேலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடத்துவதிலும் குளறுபடிகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பு இருந்தது போல் இடைநிலைக் கல்விக்கு பரமக்குடியை மையமாக வைத்து கூடுதல் மாவட்டக்கல்வி அலுவலகத்தை ஏற்படுத்தி தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News