உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் பர்வதவர்தினி அம்மன்.

ராமநாதசுவாமி-பர்வதவர்தினி அம்பாளுக்கு நாளை திருக்கல்யாணம்

Published On 2023-07-23 08:16 GMT   |   Update On 2023-07-23 08:16 GMT
  • ராமநாதசுவாமி-பர்வதவர்தினி அம்பாளுக்கு நாளை திருக்கல்யாணம் நடக்கிறது.
  • ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

ராமேசுவரம்

ராமேசுவரம் ராம நாதசுவாமி கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பர்வதவர்த்தினி அம்மன், ராமநாத சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வரு கின்றனர்.

விழாவின் 12-வது நாளான நாளை மாலை கோவிலின் தெற்கு நந்தவனத்தில் அமைக்கப் பட்டுள்ள மண்டபத்தில் திருக்கல்யா ணம் நடக்க உள்ளது. இந்த நிலையில் இன்று கோவிலுக்கு சொந்த மான ராமதீர்த்தம்கரை மண்டகபடியில் மாற்று நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக இன்று காலை பர்வதவர்த்தினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் மண்டக படிக்கு 4 ரத வீதி, நகர் பகுதி வழியாக வந்து சேர்ந்தார். அங்கு அம்பா ளுக்கு சிறப்பு பூஜைகள் தீபாரா தனை நடந்தது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இதனை தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்மன் இன்று பிற்பகலில் மீண்டும் கோவிலுக்கு எழுந்தருளுவார். பின்னர் ராமநாதசுவாமி- பிரியா விடை, பர்வதவர்த்தினி அம்மன், ராமநாதசுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தொடர்ந்து நாளை அதிகா லையில் ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளுவர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை மாலை 6 மணிக்கு மேல் ராமநாத சுவாமி- பர்வத வர்த்தினி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News