உள்ளூர் செய்திகள்
முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்பு
- சேலம் செவ்வாய்ப் பேட்டை, நரசிம்மன் செட்டி ரோட்டில், சித்திரைச்சாவடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
- இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள, 1418 சதுரடி நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் செவ்வாய்ப் பேட்டை, நரசிம்மன் செட்டி ரோட்டில், சித்திரைச்சாவடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள, 1418 சதுரடி நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.
இது குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, கோவில் நிர்வாகம் எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தர விட்டது.
இதையடுத்து சேலம் மண்டல இந்து சமய அறநிலைய துறை இணை கமிஷனர் மங்கையர்க்கரசி மேற்பார்வையில் உதவி கமிஷனர் ராஜா மற்றும் அதிகாரிகள் நேற்று அங்கு சென்று முருகன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டனர். இதற்கான பாதுகாப்பு பணியில் அன்ன தானப்பட்டி போலீசார் ஈடுபட்டிருந்தனர்.