உள்ளூர் செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம்

Published On 2022-12-03 09:59 GMT   |   Update On 2022-12-03 09:59 GMT
  • 151 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
  • பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் நிவாரண உதவி.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கூரை வீடுகளில் வசிக்கும் ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். மாரிமுத்து எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 151 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

முத்தூட் குழும சமூக பொறுப்பு திட்ட மேலாளர் ஜெயக்குமார் நலத்திட்டம் குறித்து பேசும்போது:-

முத்தூட் குழுமம் சமூக பொறுப்பு திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ உதவி, டயாலிசிஸ், கல்வி உதவி, விதவைகளின் பெண்கள் திருமண உதவி, மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார உதவி மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட திருப்பாலி, சோலைக்குளம், நெய் குன்னம், நல்ல நாயகிபுரம் கிராமங்களில் கூரை வீடுகளில் வசிக்கும் ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.2.13 லட்சம் மதிப்பில் தார்பாய் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதில், நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சுந்தர், மாவட்ட பேரிடர் ஆலோசனைக்குழு உறுப்பினர் செல்வகணபதி, முத்தூட் தஞ்சாவூர் கிளை மேலாளர் வினோத் ரமேஷ், கிளை மேலாளர் அகல்யா, கவுன்சிலர் வசந்த் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் பாலம் திட்ட அலுவலர் பரந்தாமன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News