உள்ளூர் செய்திகள்

ரெயில்வே பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

அக்கரைப்பேட்டை ரெயில்வே மேம்பால பணிகள் ஆய்வு

Published On 2023-07-27 08:22 GMT   |   Update On 2023-07-27 08:22 GMT
  • ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
  • விரைந்து பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

நாகப்பட்டினம்:

நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ரெயில்வே மேம்பால பணி ஆய்வு செய்து கூறியதாவது:-

நாகப்பட்டினம் - அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டிமுடிக்கப்படாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்ற நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் சட்டமன்றத்தில் நான் இது குறித்து பேசினேன்.

அப்போது, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, விரைவில் பணி தொடங்கப்படும் என்று அறிவிப்பு செய்தார். அதன்படி ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் ஆகியோருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.

விரைந்து பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறினார்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி செயற்பொ றியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News