உள்ளூர் செய்திகள்

தஞ்சை மாரிக்குளம் நந்தவனத்தில் மேயர் சண். ராமநாதன் மரக்கன்று நட்டு வைத்தார்.

தஞ்சை மாரிக்குளம் நந்தவனத்தில் மரக்கன்று நடும் விழா- மேயர் தொடங்கி வைத்தார்

Published On 2022-08-24 09:48 GMT   |   Update On 2022-08-24 09:48 GMT
  • பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பரிசீலித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
  • மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெறும் மரக்கன்று நடும் விழாவில் மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் தினமும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

அங்கு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பரிசீலித்து நடவ டிக்கை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில்தஞ்சை பூக்கார தெரு விளார் சாலையில் உள்ள மாரிக்கு ளம் நந்தவனத்தில்தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் கேலக்ஸி ரோட்டரி சங்கம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.இந்த விழாவில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ரம்யா சரவணன், கன்னுக்கிணியாள், மாநகராட்சி உதவி பொறியாளர் சந்திரபோஸ், துப்புரவு ஆய்வாளர் மோகனப்பிரியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ) மாநகர செயலாளர் எஸ்.எம். ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News