உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு மரக்கன்று நட்ட காட்சி

சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு கிராம உதயம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2022-06-05 09:48 GMT   |   Update On 2022-06-05 09:48 GMT
  • கிராம உதயம் உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
  • 1100 மரக்கன்றுகளை நட்டனர்.

நெல்லை:

நெல்லை மாவட்ட நிர்வாகம், வீரவநல்லூர் பேரூராட்சி மற்றும் கிராம உதயம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 1100 மரக்கன்றுகள் நடும் விழா தட்டன் குளம் பகுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். சேரன்மகாதேவி சப் -கலெக்டர் ரிஷாப் முன்னிலை வகித்தார்.

கிராம உதயம் வழக்கறிஞரும், ஆலோசனை குழு உறுப்பினருமான புகழேந்தி பகத்சிங் வரவேற்றார். பேரூராட்சி உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர், வீரவநல்லூர் பேரூராட்சி மன்றத் தலைவர் சித்ரா, செயல் அலுவலர் சத்தியதாஸ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இதில் கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் தன்னார்வ தொண்டர்கள், கிராம உதயம் உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 1100 மரக்கன்றுகளை நட்டனர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் சசிகலா நன்றி கூறினார்.

Tags:    

Similar News