உள்ளூர் செய்திகள்

சிங்கம்புணரியில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பா.ஜ.க. மாநில சிறுபான்மை அணி துணைத்தலைவர் சேக்தாவூத் விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Published On 2022-09-03 08:19 GMT   |   Update On 2022-09-03 08:19 GMT
  • சிங்கம்புணரியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
  • பாலம் நண்பர்கள் குழுசார்வில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதாணம் வழங்கப்பட்டது.

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. சீரணி அரங்கம் பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் அரசு மருத்துவமனை சாலை, சுந்தரம் நகர், திண்டுக்கல் ரோடு, பஸ் நிலையம், 4 முனை சாலை சந்திப்பு வழியாக திருப்பத்தூர் ரோட்டில் உள்ள சேவுகப் பெருமாள் அய்யனார் ஆலய தெப்பக்குளத்தில் விஜர்சனம் செய்யப்பட்டது.

41 விநாயகர் சிலைகள் பங்கேற்ற இந்த ஊர்வலத்தை பா.ஜ.க. சிறுபான்மையினர் ஒன்றிய செயலாளர் சகுபர் சாதிக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பஸ் நிலையம் முன்பு அமைந்துள்ள பள்ளிவாசல் முன்புறம் மாநில சிறுபான்மையினர் அணி துணை செயலாளர் சேக் தாவூத் விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்த ஊர்வலத்தில் வழிநெடுகிலும் பக்தர்கள் அமைதியான முறையில் கண்டு களித்தனர்.

விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி ஆர்.எஸ்.எஸ். வட்டார தலைவர் குகன் மற்றும் தினேஷ், சத்தியன் அம்பலம், பாலசுப்பிரமணியன், மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். சேவுகப் பெருமாள் அய்யனார் ஆலய தெப்பத்தில் விநாயகர் அனைத்து விநாயகர் சிலைகளும் விஜர்சனம் செய்யப்பட்டது. பாலம் நண்பர்கள் குழுசார்வில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதாணம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News