உள்ளூர் செய்திகள்

கருப்பர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-05-23 08:35 GMT   |   Update On 2023-05-23 08:35 GMT
  • கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது,
  • பாதுகாப்பு பணியில் நெற்குப்பை போலீசார் ஈடுபட்டனர்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி ராஜவீதியில் உள்ள நம்பங் கருப்பர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. அரை நூற்றாண்டுக்கு முன்பு இந்த ஊரில் வாழ்ந்த தம்பதிக்கு 8 பிள்ளைகள் இருந்ததாகவும், அதில் 7 ஆண்பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளையும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த 7 ஆண் பிள்ளைகளும், ஒன்றிணைந்து சகோதரியை இந்த பகுதியிலேயே திருமணம் முடித்த காலகட்டத்தில் கடுமை யான பஞ்சம் ஏற்பட்டது. அதன் காரணமாக இந்த பகுதியில் இருந்து வெளியேறிய 7 சகோதரர்களும் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை இரு மாவட்டங்களைச் சேர்ந்த மூலங்குடி, எழுவங்கோட்டை, குன்னாரம்பட்டி, கேசராபட்டி, நாட்டார்மங்கலம், ரணசிங்கபுரம், வலசைப்பட்டி ஆகிய கிராமபகுதிகளில் வாழ்வாதாரத்துக்காக தஞ்சம் புகுந்தனர். பின்பு நாளடைவில் இவர்களின் சந்ததியினர் தொழில்துறைகளிலும், விவசாயத்திலும் முன்னேற்றம் கண்டு முன்னோர்களின் பூர்வீக தெய்வமான நம்பங் கருப்பர் கோவில் வீட்டை புனரமைத்தனர்.

அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கும்பாபிஷேகம் நடந்தது. கலசத்தில் அபிஷேக நீர் ஊற்றி திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை 8 கரை பங்காளிகள் மற்றும் சோழகன் வகையறா பாடியப்பன் அம்பலம் செய்திருந்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் நெற்குப்பை போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News