உள்ளூர் செய்திகள்

சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் அச்சம்

Published On 2023-04-30 08:08 GMT   |   Update On 2023-04-30 08:08 GMT
  • திருப்புவனத்தில் சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
  • அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் பெரிய பேரூராட்சி ஆகும். இங்குள்ள வைகைஆற்றின் மற்றொரு கரையில் மடப்புரம் காளிஅம்மன் மற்றும் முன்னோர்கள் திதி கொடுத்து வழிபடும் புஷ்பவனேசுவரர் கோவில்கள் உள்ளன.

கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் மற்றும் திருப்புவனத்தை சுற்றி உள்ள ஏராளமான கிராம மக்கள் இங்கு வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். அடிக்கடி போக்கு வரத்து நெருக்கடியும் ஏற்படும்.

தற்போது சாலைகளிலும், பஸ்நிறுத்தம் மற்றும் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களிலும் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இரவு-பகலாக சாலையில் சுற்றி திரியும் மாடுகள் முட்டி பலர் காயம டைந்துள்ளனர்.

சிலநேரங்களில் மாடுகளுக்கிடையே ஏற்படும் சண்டையால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் மீது முட்டி மோதி ஏராளமான வாகனங்கள் சேதமடை கின்றன.

மாடுகள் நிற்பதை அறியாத வெளியூர் பயணிகள் அவை முட்டி காயமடைந்துள்ளனர். திருப்புவனத்திற்கு பஸ்நிலையம் இல்லாததால் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் சாலைகளில் திரியும் மாடுகளால் அச்சமடை கின்றனர்.

சாலையில் திரியும் மாடுகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News