உள்ளூர் செய்திகள் (District)

தருமபுரியில் சிறுகுறு தொழில்களுக்கு சிறப்பு கடன் முகாம்

Published On 2023-08-20 10:13 GMT   |   Update On 2023-08-20 10:13 GMT
  • அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் அதன் சலு கைகள் குறித்து முகாமில் விளக்கப்பட உள்ளது.
  • தொழில திபர்கள் தொழில் திட்டங்க களுடன் வந்து தொழில் கடன் மற்றும் மாநில அரசின் மானிய சேவை களை பயன்படுத்திக் கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் சிறுகுறு தொழில்களுக்கு சிறப்பு கடன் முகாம் நடக்கிறது. இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் தருமபுரியில் உள்ள கிளை அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற செப்டம்பர் மாதம் 1- ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் மாநில அரசின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தகுதி பெறும் தொழில்களுக்கு அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மற்றும் அதன் சலுகைகள் குறித்து முகாமில் விளக்கப்பட உள்ளது. இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும்.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் தொழில் திட்டங்ககளுடன் வந்து தொழில் கடன் மற்றும் மாநில அரசின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News