உள்ளூர் செய்திகள்

பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.

புத்தக திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

Published On 2022-09-30 07:04 GMT   |   Update On 2022-09-30 07:04 GMT
  • இலக்கிய களம் சார்பில் 9-வது புத்தகதிருவிழா வருகிற 6-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
  • இன்று கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் இலக்கிய களம் சார்பில் 9-வது புத்தகதிருவிழா வருகிற 6-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக இன்று கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திண்டுக்கல் நகரில் 8 முனைகளில் இருந்து இந்த பேரணி தொடங்கியது.

நத்தம் ரோடு குடகனாறு இல்லம், மதுரை ரோடு பான்செக்கர்ஸ் கல்லூரிமுன்பு, சிலுவத்தூர் ரோடு எம்.எஸ்.பி பள்ளி முன்பு, வத்தலக்குண்டு ரோடு பார்வதீஸ் கல்லூரி, தாடிக்கொம்பு ரோடு எம்.வி.எம் கல்லூரி முன்பு, திருச்சி ரோடு உழவர்சந்தை, பழனி ரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, குஜிலியம்பாறை ரோடு பெஸ்கி கல்லூரி முன்பு என 8 இடங்களில் இருந்து பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை அந்தந்த கல்லூரி முதல்வர்கள் தலைைமயில் பேராசிரியர்கள் தொடங்கி வைத்து வழிநடத்தினர். புத்தக திருவிழா நடைபெறும் டட்லி பள்ளியில் பேரணி நிறைவடைந்தது. அங்கு தலைவர் மனோகரன் தலைமை வகித்து பேசினார். துணைத்தலைவர் சரவணன், எழுத்தாளர் ராமமூர்த்தி, இணைச்செயலாளர் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News