உள்ளூர் செய்திகள்

செங்கோட்டையில் பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் - தானியங்கி கதவுகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-10-12 08:53 GMT   |   Update On 2023-10-12 08:53 GMT
  • மாணவர்கள் பள்ளி செல்வதற்கும், பள்ளி முடிந்து வீடுகளுக்கு செல்வதற்கும் நகர பஸ்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.
  • போதுமான அளவிற்கு நகர பஸ்களும், பஸ் உள்ளே நிற்பதற்கு போதுமான இடங்கள் இருந்தாலும் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கி செல்கின்றனர்.

செங்கோட்டை:

செங்கோட்டை அதன் சுற்று வட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கிராமபுறங்களில் இருந்து செங்கோட்டை மற்றும் இலஞ்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி செல்வதற்கும், பள்ளி முடிந்து வீடுகளுக்கு செல்வதற்கும் நகர பஸ்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.

போதுமான அளவிற்கு நகர பஸ்களும், பஸ் உள்ளே நிற்பதற்கு போதுமான இடங்கள் இருந்தாலும் காலை, மாலை நேரங்களில் இந்த மாணவர்கள் முன்பக்க, பின்பக்க படிக்கட்டுகளில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்தான முறையில் தொங்கி செல்கின்றனர். இதனை பார்ப்போர் நெஞ்சை பதபத வைக்கிறது.

குறிப்பாக செங்கோட்டையில் இருந்து சுரண்டை, கடையநல்லூர், தெற்குமேடு, கற்குடி, தென்காசி, குற்றாலம் செல்லும் பஸ்களில் இந்நிலை காணப்படுகிறது. எனவே மாணவர்களின் ஆபத்தான படிக்கட்டு பயணத்தை தடுக்க அனைத்து நகர பஸ்களிலும் தானியங்கி கதவுகளை பொருத்த போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவல்துறையினரும் மாணவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News