உள்ளூர் செய்திகள்

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.30 லட்சத்தை இழந்த தம்பதி

Published On 2023-05-27 09:23 GMT   |   Update On 2023-05-27 09:23 GMT
  • கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து அதற்கான வட்டியினை தராமல் இழுத் தடித்துள்ளார்.
  • திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

சென்னை:

அண்ணா நகர் 6-வது அவென்யூவை சேர்ந்தவர் கணேஷ். இவரை சாலி கிராமத்தில் உள்ள அவரது நண்பர் ஹரி வெங்கடேஷ்வரன் தொடர்பு கொண்டு எனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 1.5 சதவீதம் மாதம் வட்டி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

அதை நம்பி கணேஷ் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து 20 லட்சம் ரூபாயை அந்த நிறுவனத்தின் கர்நாடக வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். அதற்கு 3 மாதங்கள் வட்டியினை கணேசுக்கு ஹரி கொடுத்து உள்ளார்.

அதன்பின்பு மீண்டும் முதலீடு செய்ய கூறியதால் வட்டிக்கு ஆசைப்பட்டு மேலும் ரூ.10 லட்சத்தை அனுப்பியுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து அதற்கான வட்டியினை தராமல் இழுத் தடித்துள்ளார். இதனால் கொடுத்த பணத்தை கணேஷ் திருப்பி கேட்ட போது சரியான பதில் அளிக்கவில்லை. கணேசின் மனைவி திவ்யா போலீசில் பணத்தை ஏமாற்றி மிரட்டுவதாக ஹரி வெங்கடேஷ்வரன் மீது புகார் செய்தார். புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News