உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் திருடிய மோட்டார் சைக்கிளில் சுற்றிய வாலிபர் கைது

Published On 2023-05-13 09:09 GMT   |   Update On 2023-05-13 09:09 GMT
  • கிருஷ்ணராஜ் இரவு வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • அப்பாஸை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் தாசனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்(37). இவர் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்து வருகிறார்.

கிருஷ்ணராஜ் கடந்த 11-ந் தேதி தனக்கு சொந்தமான ேமாட்டார்சைக்கிளை மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் கோவை பஸ்கள் நிற்கும் இடத்தில் நிறுத்தி விட்டு நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு பணிக்குச் சென்றுள்ளார்.

இரவு வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளார். தொடர்ந்து இரவு வெகு நேரமானதால் வீட்டிற்கு சென்று விட்டார்.

மறுநாள் காலையில் வேலைக்கு சென்று விட்டு வந்த கிருஷ்ணராஜ் தனது நண்பர் குணசேகரன் என்பவருடன் அண்ணாஜி ராவ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணராஜின் வாகனத்தை மற்றொரு நபர் ஓட்டி சென்றது கண்டு அவரை கையும், களவுமாக பிடித்து மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையை சேர்ந்த அப்பாஸ்(47) என்பதும், இருசக்கர வாகனத்தை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News