உள்ளூர் செய்திகள்

தஞ்சை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் நடந்தது.

குப்பை கிடங்கு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

Published On 2022-07-27 10:36 GMT   |   Update On 2022-07-27 10:36 GMT
  • தஞ்சை ஜெபமாலைபுரம் குப்பைகிடங்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது.
  • இந்த துயர சம்பவத்தில் இறந்த முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் மணிகண்டன் பேசியதாவது:- தஞ்சை ஜெபமாலைபுரம் குப்பைகிடங்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். சில வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமானது. இந்த துயர சம்பவத்தில் இறந்த முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வீடுகளை இழந்து தவிப்பவர்களுக்கும் உரிய இழப்பீடு உடனே வழங்க வேண்டும். இதேப்போல் குப்பை கிடங்கில் வேலை நடந்த வருவதில் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கோரிக்கை சம்பந்தமாக பேசும்போது அனைத்து தீர்மானமும் முன்மொழிந்து விட்டதாக கூறி கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்கள் கோபால், சரவணன், கேசவன், காந்திமதி, தெட்சிணாமூர்த்தி, கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News