உள்ளூர் செய்திகள் (District)

காந்தி நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட வீடுகளையும், தண்ணீர் நிரம்பி வெளியேறும் இடுபன் குளத்தையும் அமைச்சர் மதிவேந்தன் மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் பார்வையிட்ட காட்சி.

பரமத்தி முகாமில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்

Published On 2022-10-23 08:27 GMT   |   Update On 2022-10-23 08:27 GMT
  • பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் பரமத்தி சமுதாய கூடத்தில் உள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
  • நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் நேற்று முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா விற்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக அங்குள்ள இடும்பன் குளம் நிரம்பி அதன் உபரிநரீ, பரமத்தி பேரூராட்சி காந்திநகர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் பரமத்தி சமுதாய கூடத்தில் உள்ள தற்காலிக நிவா ரண முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் நேற்று முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து காந்தி நகரில் பாதிக்கப்பட்ட வீடுகளையும், மழையால் நிரம்பிய இடும்பன் குளத்தையும் பார்வையிட்டனர்.

இதில் திருச்செங்கோடு கோட்டாட்சியர் கௌசல்யா, பரமத்திவேலூர் தாசில்தார் சிவக்குமார், பரமத்தி பேரூ ராட்சி தலைவர் மணி, பரமத்தி பேரூர் செயலாளரும் பேரூராட்சி துணைத் தலைவருமான ரமேஷ்பாபு, வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி இளநிலை உதவியாளர் அண்ணாதுரை, அலுவலக உதவியாளர் நல்லுசாமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News