உள்ளூர் செய்திகள்

சித்ரா காணாமல் போன தனது மகனை மீட்டு தர கோரி போலீசாரிடம் மனு கொடுத்த காட்சி.

மகளை மீட்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தாய் கண்ணீர் மனு

Published On 2023-04-17 09:36 GMT   |   Update On 2023-04-17 09:36 GMT
  • இன்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளை கடத்தி சென்று விட்டதாக கண்ணீர் மல்க மனு கொடுத்தார்
  • எனது மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். 1.4.2023 அன்று சிறப்பு வகுப்பிற்கு எனது மாமா பழனிசாமியுடன் சென்றார்.

ேசலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கொத்தாம்பாடி பாரதியார் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி சித்ரா (வயது 38). இந்த தம்பதியின் 16 வயது மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் சித்ரா, இன்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளை கடத்தி சென்று விட்டதாக கண்ணீர் மல்க மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது மகள் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். 1.4.2023 அன்று சிறப்பு வகுப்பிற்கு எனது மாமா பழனிசாமியுடன் சென்றார். அதன் பிறகு பள்ளியின் வகுப்பாசிரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காலை 10.50 மணிக்கு உங்களுடைய மகளின் புத்தக பை மட்டும் வகுப்பறையில் உள்ளது. உங்களின் மகளை காணவில்லை என்று அதே பள்ளியில் படித்து வரும் என மூத்த மகளிடம் தெரிவித்தார்.

இதை அறிந்ததும் நாங்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது உறவினர் வீட்டில் தேடி பாருங்கள் என கூறினர். இதையடுத்து உறவினர்கள் வீடுகளில் தேடினோம். ஆனால் மகள் அங்கு இல்லை.

இந்த நிலையில் ெகாத்தாம்பாடியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் என்பவர் எனது மகளை கடத்திச் சென்றுள்ளதாக தகவல் அறிந்தோம்.

இதையடுத்து நாங்கள் சம்பவத்தன்று இரவு ஆத்தூர் ரூரல் போலீசில் புகார் கொடுக்க சென்றோம். ஆனால் போலீசார் மறுநாள் காலையில் வருமாறு கூறினார்கள். மறுநாள் காலையில் சென்றோம். அன்று மாலை வரை காத்திருக்க வைத்து விட்டு, பின்னர் பள்ளி பெத்தநாயக்கன்பாளை யத்தில் உள்ளது, எனவே ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு செல்லுங்கள் என போலீசார் கூறினர்.

இதையடுத்து நான் அங்கு சென்று புகார் அளித்தேன். 3-ந்தேதி அன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நகலை பெற்றுக்கொண்டேன். கடத்தப்பட்ட எனது மகள் பற்றி இதுவரையிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆகவே எனது மகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சித்ரா அதில் கூறியிருந்தார்.

Tags:    

Similar News