உள்ளூர் செய்திகள்

சாலை பணிகளை நிறுத்தி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலை பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

Published On 2023-06-18 09:45 GMT   |   Update On 2023-06-18 09:45 GMT
  • பழைய சாலையை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும்.
  • சாலை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சீர்காழி:

சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் தேர் ஓடும் வீதிகள்,கோயிலை சுற்றியுள்ள வீதிகள், தியாகிசாமிநாதர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதில் நகர்புரத்தில் சுமார் 1கோடியே 54 லட்சம் மதிப்பில் 37 சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சீர்காழி பழைய பேருந்துநிலையம் பகுதியில் முக்கிய சாலையான பாரத வங்கி அருகே சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

சாலை அமைப்பது குறித்து விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்காமல்பழைய சாலைகள் அகற்றப்படாமல், அதன் மீது புதிய தார் சாலை தரமற்ற முறையில் அமைப்பதாக குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், புதிய சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதுடன், பணியை மேற்கொண்டவர்களிடம் விளக்கம் கேட்டனர்.

   இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பழைய சாலையை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும், தரமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் அப்பகுதியில் மட்டும் சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News