உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் குறைதீர்வு கூட்டம்

Published On 2022-11-29 09:19 GMT   |   Update On 2022-11-29 09:19 GMT
  • கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்
  • 525 மனுக்கள் பெறப்பட்டது

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதி யோர் உதவித்தொகை, கூட் டுறவு கடனுதவி, மாற்றுத்திற னாளிகள் நலத்திட்ட உதவி கள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 525 மனுக்களை பொது மக்கள் அளித்தனர்.

பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மனுக்கள், சம்பந்தப்பட்டதுறை அலுவ லர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற் கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவ டிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி மாவட்ட பொதுச்செய லாளர் புருஷோத்தமன் அளித்துள்ள மனுவில் மாவட் டத்தில் தென்னை விவசாயம்' அதிக அளவில் உள்ளது. தென்னை விவசாயிகளுக்கு ஊக்கமுட்டும் வகையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கூறியிருந் தார். இதேபோல் மாதனூர் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சிமன்றதுணை தலை வர் கீதா அளித்துள்ள மனு வில் ஊராட்சியில் பல்வேறு நிதி முறைகேடு நடைபெறு கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஊராட்சியில் முறை கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப் பட்டு இருந்தது.

அதைத்தொடர்ந்து கூட் டத்தில் 5 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான தொகுப்புகள், தசைசிதைவு நோயினால் பாதிப்படைந்த புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு மாண வன் கோகுலுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி ஆகியவற்றை கெலெக்டர் வழங் கினார்.

முன்னதாக சர்வதேச பெண்களுக்கு எதிரான வன். முறைகளை ஒழிக்கும் தின உறுதிமொழியினை கலெக் டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் எடுத் துக் கொண்டனர்.

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு திங்கட்கிழமை தோறும் மனுகொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகின்றனர். அவர்கள் உட்காருவதற்கு நாற்காலி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது. பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை கணினியில் பதிவு செய்வதற்கு போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் மனுவை கொடுத்து பதிவு செய்ய நீண்ட நேரம் காத்து இருக்க வேண்டிய நிலை உள்ளது.

நேற்று திங்கட்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். கூட்டம் அதிகமானால் பொதுமக்கள் அம ருவதற்கு போடப்பட்டிருந்து ஒருசில இருக்கைகள் முழுவதும் நிரம் பியது. கூடுதலாக நாற்காலிகள் இல்லாததால் மனுகொடுக்க வந்த பெண்கள் பலர் நீண்ட நேரம் தரையில் அமர்ந்து இருந்தனர்.

குறைகளை தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத குறைகளை யாரிடம் தெரிவிப்பது என தவித்தனர்.

Tags:    

Similar News